Tuesday, September 4, 2007

விளையாட்டு

சிறுமியர் சிற்றில் கட்டி சிறு சோறு சமைத்து விளையாடும் பகுதியை பெரும்பாலும் பிள்ளைத்தமிழில் பார்க்கலாம் "பழனிமுருகன் பிள்ளைத்தமிழில்" சிற்றில் பருவத்தில் உள்ள ஒரு பாட்டின் முன் பகுதியில்.

"பருமுத்தரிசி தனையாய்ந்து பசுந்தேனதனை வடித்தெடுத்துப்
பவளக் குடத்தினுலை யேற்றிப் பரிவு தரும் பாற்சோறாக்கி
ஒருமைப்படியே பூந்தளிரை ஒன்றாய்ப் பறித்து கறி சமைத்தே
உண்ணும் படிக்கிங்குபசரிக்கும் உரிமைப் பருவத்திளங் கோதை"
-சின்னப்பநாயக்கர்.
என்று சிறுமியர் சிறு சோறு சமைத்து உண்ணும் படி உபசரிக்கும் செயல் அழகாக வர்ணிக்கப்படுகிறது.

திருவிளையாடற் புராணத்தில் பரஞ்சோதி முனிவர் மதுரையின் செல்வச் செழிப்பை இதன்மூலம் கூறுகிறார்.

வணிகச் சிறுமிகள் மரகதங்களால் அம்மிக் குழவிகளும், ஒளிமிக்க வைரங்களால் உலக்கை உரல்களும் வெள்ளியினால் அடுப்பும் அமைத்துக் கொள்வர்.
அகில்கட்டையை விறகாகவும் பனிநீரை உலை நீராகவும் முத்துக்களை அரிசியாகவும்
சிவந்த மாணிக்கத்தை நெருப்பாகவும் கொண்டு பொன்னால் சமையல் பாத்திரங்களை அமைத்துக் கொண்டு விளையாடுவர்.

( திருவிளையாடற் புராணம் பாடல்-155 )
கம்யூட்டர் கேம்ஸீம், கேபிள் டி.வியும் அறிந்த இக்கால குழந்தைகளுக்கு இப்படி ஒரு விளையாட்டு இருந்தது தெரியுமா?

M.Jeya Bharathi

1 comment:

rajesh kumar said...

நன்றாக விளையாடி மகிழ்ந்திருந்த காலம்.ஹூம் பெருமுச்சு தான் விட முடியும் இப்பொழுது.