நுண் உருப் பெருக்கியைக் கண்டறிந்தவர்,
தன் மனத்தில் எழுந்த சந்தேகத்தினை
நிவர்த்திச் செய்யும் பொருட்டு அல்லது
இயல்பான உந்தலில்,
தற்செயலாய் கண்டறிந்திருக்கின்றார்.
பின் வந்தவர்கள் அதனை
நன்கு உயர் தொழில் நுட்ப திறனுடன்
செயல்லாக்கம் கண்டனர்.
இப்பொழுது நாம் கணினியுடன் இணைத்து,
அகன்ற திரையுடன் இணைத்து
என பார்க்கின்றோம்.
ஆக பயிற்சி இன்றி இக்காரியம் சித்திக்காது.
இவ்வாறே ஒவ்வொரு விஷயத்திற்கும்
விஷய ஞானமும்,தெளிவும் வேண்டும்.
அவ்வாறே ஆன்மீகத்திற்கும் பயிற்சியும்,
ஞானமும் வேண்டும். இதனை உணர்ந்த சித்தர்களும்,
ஞானிகளும் நமக்கு உணர்த்தினர்.
பயந்து விடாதீர்கள். புரியாதப் பாடலைப்
போட்டு கஷ்டப்படுத்துவேன் என்று.
வணிக கணிதக்கென ஒரு மொழி,
மருத்துவத்திற்கென்று ஒரு மொழி,
வான வெளிக்கென்று ஒரு மொழி,
இவ்வாறே விலங்கியல்,வேதியல்,இயற்பியல்
என அனைத்திற்கும் தனிப்பட்ட
டெக்னிக்கல் லாங்க்வேஜ் இருக்கும்.
அது போலவே ஞான மார்க்கத்துக்கென்று
மொழி உண்டு. அதை படிக்க முடியவில்லை,
புரியவில்லை என்ற முணுமுணுப்பு உண்டு.
எனவே அவ்வாறு இடையில் வந்தால்
அவ்வார்த்தைகளுக்கு விளக்கம்
எழுதி விடுகிறேன்.
பெரும்பாலும் தவிர்க்க முயன்று,
எளிய நடையிலயே முயல்கின்றேன்.
No comments:
Post a Comment