Saturday, June 9, 2007

நமக்கு சந்தேகம் வருவது கண்ணால்
காண இயலாதாவற்றில்...
உணவுப் பொருள் காண்பதற்கு
நன்றாக இருக்கின்றது....
ஆனால் ருசி.. அதில் சந்தேகம்
வந்து விடுகிறது.
கண்ணால் பார்க்க இயலதாலால்....

கணவன் நாம் மீது அன்பு செலுத்துவானா?
நன்றாக கவனித்துக் கொள்வானா?
மனைவி எத்தகையவளோ?
வீட்டிற்கு அனுசரித்துப் போவாளோ
என்னவோ?
புதிதாக வந்திருக்கும் டீச்சர் எப்படியோ,
நல்ல பாடம் சொல்லிக் கொடுப்பார்களோ
என்னவோ..
.ஒருவேளை கோபக்காரர்களோ என்னவோ...
முதலாளியின் குணம்.......
என்று சொல்லிக் கொண்டே போகலாம்...

இதையே இன்னொரு விதமாகப் பார்ப்போம்.
காற்றினை நாம் உணர்கிறோம்.
ஆனால் கண்ணால் பார்க்க முடியவில்லை.
விஞ்ஞானிகள் அக்காற்றினை வகைபடுத்தி
வெவ்வேறு பெயரிட்டு,மூலக்குறு வாய்பாட்டினை
கணடறிந்திருக்கின்றார்கள்.
இதை நாம் மனம் ஏற்று கொள்கிறது.
யாருக்கு?கல்வி கற்றவர்களுக்கு.
ஆனால் என் பணிமகளுக்கோ சந்தேகம்.
1 பங்கு ஆக்ஸிசனும் 2பங்கு ஹைட்ரஜனும்
சேர்ந்தால் நீர் என்று கூறினால்...
எல்லா இடத்திலேயேயும் காத்து இருக்கின்றது,
அப்புறம் ஏன் எல்லாவிடத்திலும்
தண்ணீர் இல்லை?
ஏன் இல்லை என்பது
கற்றிந்தவர்கள் அறிந்ததுவே.
மேலும் காண்போம்.......

No comments: