இறையும் மறையா மறையும்!
"அவனருளாலே அவன் தாள் வணங்கி" ஆரம்பிக்கின்றேன்.......
உலகத்தில் உள்ள பொருள்களை 2 வகையாகப் பிரிக்கலாம்...
1.கண்ணால் பார்க்க கூடிய பருப்பொருள்கள்(ஸ்தூலம்)
(உ.ம்)கல்,மண்,கட்டிடம்,உடல் போன்றவை..... (Materials)
2.மனதால் உணரக் கூடியது(சூட்சமம்)
அன்பு,காதல்,கருணை,வலி,ஆசை போன்றவை.....
(Non Materials)
இரண்டுமே மனிதர்களுக்குத் தேவைப்படுகிறது.
கண்ணால் காணக்கூடியவற்றில்
நமக்கு சந்தேகம் வருவதில்லை...
ஏன் என்றால் பார்க்கின்றோம்......
அதனால் அழகானது,அழகற்றது என்று
நம்மால் தரம் பிரிக்க முடிக்கின்றது.
இது போக கண்ணால் பார்க்க முடிகிறது
ஆனால் அதன் நடைமுறை கண்களுக்குத்
தெரிவதில்லை.
ஆனாலும் நாம் அதை ஏற்கின்றோம்....
(உ.ம்)வானொலி,தொலைக்காட்சி, இணையம்,சூரிய,
சந்திரர்களின் தூரம் போன்றவை...
இதையும் நம் மனம் ஏற்றுக் கொள்கிறது...
காரணம் விஞ்ஞானிகள் அறிவியற்பூர்வமாக
நிருபிக்கின்றார்கள் என்ற உண்மையை
மனம் ஏற்று கொண்டதால்.
நமக்கு தெரியாவிடினும்.....
2 comments:
ஸ்தூலமும் சூட்சுமமும் அழகாச் சொல்லி இருக்கீங்க புஷ்பலதா!
மின்சாரத்தை எவ்வளவு முயன்றாலும் கண்ணுக்குக் காட்ட முடியாது விஞ்ஞானிகளால் கூட!
அதை உணர இன்னொரு புலன் தேவை!
தொட்டு ஷாக்கடித்தால் தெரியும்! இல்லை அதனால் ஒடும் மற்ற பொருட்களைப் பார்த்து, ஓ இதனால் தான் ஓடுகின்றன என்று சொல்லிக் கொள்ளலாம் அவ்வளவே! :-)
விறகில் தீயினன் பாலில் படுநெய் போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
என்பார்!
பாலில் நெய் போல்
விறகில் தீ போல்
மறைய நின்றவனை அழகாகக் காட்டித் துவங்கி இருக்கீங்க! வாழ்த்துக்கள்!
மிக அழகான மேற்கோள்களுடன் உரைத்தனை கண்ணபிரான்.மொத்த விஷயமும்
இந்த இருவரிகளில் அடங்கி விடுகின்றது.
//விறகில் தீயினன் பாலில் படுநெய் போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் //
நன்றி கண்ணபிரான்.
Post a Comment