பச்சைப்பன் கல்லூரியின் முன்,குறிப்பாக சுவரின் முன் நின்ற சில மாணவர்களின் முன் நம் மன்ற நிருபர்(நான்தான்)பேட்டி எடுக்கிறார்.
நிருபர்;-நான் முத்தமிழ் மன்றத்திலியுருந்து உங்களை பேட்டி எடுக்க வந்துயிருக்கிறேன்.உங்கள் கொள்கை என்ன?எதற்காக இவ்வாறு பெயர் வைத்திருக்கிறீர் என்ற விளக்க முடியுமா?
சம்பத்;-இதோடா ஔவையார் சுடிதார் போட்டு வந்திருக்கு போல... நிருபர்;-என்னடா கலாய்கிறீங்க
சுந்தர்;-பின்ன என்னக்கா பாருங்க எங்க பசங்க மெர்ஜாயிட்டாங்க.தமிழல பேசுங்க.
நிருபர்;-அக்காவா
சுந்தர்;-மேடம் மாம் எல்லாம் கூப்பிட மாட்டோம் யாரயிருந்தாலும் யக்காதான்.
நிருபர்;-என்னடா கலாய்கிறீங்க
சுந்தர்;-பின்ன என்னக்கா பாருங்க எங்க பசங்க மெர்ஜாயிட்டாங்க.தமிழல பேசுங்க.
நிருபர்;-அக்காவா
சுந்தர்;-மேடம் மாம் எல்லாம் கூப்பிட மாட்டோம் யாரயிருந்தாலும் யக்காதான்.
நிருபர்;-சரிடா,தமிழ் தமிழ்ன்னீரிங்க பெயர ஏன்டா குருப்ன்னு வைச்சியிருக்கீங்க?
மகேஷ்;-அது தமிழ் இல்லையா
தனுஷ்;-நாங்க வைச்சுருக்கோமில்லை அது தமிழ்தான்.
நிருபர்;-க்ளாஸூக்கு போகமா இங்க நின்னு என்னடா செய்றீங்க?
விஜி;-க்ளாஸூக்கு போன ப்ராபளத்த எப்படி சால்வ் பண்ணறது
நிருபர்;-ப்ராபளத்த சால்வ் பண்ண லேப்புக்கு,மாத்ஸ் க்ளாஸ்குல்ல போகனும்.இங்க நின்னு எப்படிடா?
சுந்தர்;-ஊர் நாட்டுல படிச்சா இப்படித்தான் ஒன்னும் தெரியாது.கோவிக்கதா மச்சி.பாவம் தெரியாமத்தான கேட்குறங்க.நீ சொல்லு மாம்ஸ் நெட்ட சங்கர்;-வர ரூட்ல மத்த காலேஜூ பசங்க மாப்பு,கெத்து,பிலிமு காட்டிட்டு வந்தா நாங்க சும்மாவா யிருக்க முடியும்.அது என்னன்னு பார்க்க தாவல. நிருபர்;-அதானே ஏன்டா எப்ப பாத்தாலும் யார் கூடயாவது சண்டை போட்டுக்கிட்டே இருக்கீங்க?
சுந்தர்;-இப்பதக்கா கரீக்டா மேட்டருக்கு வந்திருக்கீங்க.அது சண்ட இல்லக்கா போராட்டம். அக்கா காலேஜ் கட்டி 164 வருஷமாச்சி.அப்ப என்ன நடந்தத்து சுதந்தர போராட்டம்.அதில எங்க காலேஜூம் கலந்துகிடுச்சு.அப்போர்க் கொத்த வீரப் பரம்பர எங்க பரம்பர.பழச மறக்காமா மெயின்டென் பண்ணறோம். நிருபர்;-சரிடா,எதுஎதுக்கு?ா போராடுவீங்க
(இடையில் தல சொல்லவே இல்ல நீ கேட்கவே இல்ல என்ற வசனத்தை(?)எங்கு வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளுங்கள். பேட்டி தொடர்கிறது.) சுந்தர் ;- பிரின்ஸி,ஹெஓடி இவங்களுக்கு எதிரா போராடிவோம்.
நிருபர் ; எதுக்குடா?
சுந்தர் ;- அப்பக்கி அப்ப எதாச்சு மேட்டர் கிடைக்குக்கா தியாட்டரில் ஒண்ணா டிக்கெட்டு கிடைக்கலேனா,செக்கிங் இன்ஸ்பெக்கடருக்கு போலீஸூக்கு எதிரா,எங்களுக்கு போராடிச்சக்கூட போராடுவோம்.அட அது ஏங்ககா உங்களுக்கு எதிராவும் பண்ணுவோமுல்ல.
நிருபர் ; எனக்கு எதித்தா?
சுந்தர் ; பின்னே உங்களுக்குத்தான் வேலைவெட்டி இல்லாம எங்ககிட்ட வந்து பேட்டி எடுக்கிறேனு வெட்டி பொழது போக்கிறீங்கனா, நாங்க என்ன உங்களை மாதிரி வேலை வெட்டி இல்லாதா பசங்களான்னு கூட போராடுவோம்.
நிருபர் ;- வேகமாக பேச்சை மாற்றி,ரூட்,கீட்டு பேசிக்கிறீங்களே என்னடா அது?
சுந்தர் ;- நல்ல கொஸ்டின் க்கா.வீட்டல இருந்து நம்ம பசங்கள்ளாம் கிளம்பி பஸ்ஸை பிடிச்சி ஒரு இடத்தில அசெம்பிள் ஆயிருவாங்க.100,150 அப்பிடியே மாஸா கிளம்பி பஸ்ஸில மோளம் அடிச்சிகிட்டு,புட்போர்டு ல தொங்கிட்டு போறது தான் ரூட்அடிக்கிறது பிராட்வே ரூட்,பெரம்பூர் ரூட்டுன்னு ஏகப்பட்ட ரூட் இருக்குக்கா.
நிருபர் ; -இந்த ரூட்டுல தான் உங்களுக்குள்ள சண்ட வருமாடா?
குணா ;- அப்படியும் சொல்லாம்.இல்லையென்றும் சொல்லாம்.
நிருபர் ; -என்னடா குழப்புறீங்க
சிவா ;- தெளிவா நா சொல்றேக்கா தெளிவு பின்னர்.
பேட்டி தொடர்கிறது.
சிவா ;- அவன் உங்களை மாதிரி கவித,கீவிதனு கிறுக்குவக்கா.அதான் அப்படி குழப்புறான்.
நிருபர் ; -டேய் நா எழுதறது கிறுக்கலா?
சுந்தர்; -புரியற மாதிரி ஏதாவது எழுதுறீங்களா அப்புறம் கிறுக்கல் சொல்லாம வேற எப்படி சொல்லறது.
நிருபர் ;- ரூட்டை பிடிடா
சிவா ;- மச்சி, அக்கா நம்ம ரூட்டுக்கு வந்துட்டாங்கடா
நிருபர் ;- டேய் உதப்பன்டா
சிவா ;- அது வந்துக்கா எங்களுக்குள்ள உட்கட்சி பூசல் இருந்தாலும் வெளிய விவாகாரமுன்னு வந்துச்சுன்னா நாங்க எல்லாரும் ஒண்ணாயிருவோம்.குணா அதை தா சொல்றான்.
நிருபர் ;- சரிடா இங்க குட்டி யாருடா
சுந்தர்;- குட்டின்னு யாருமில்ல அக்கா.டி.ராஜேந்திரன் அடுக்கு வசனம் மாதிரி கு.கு.கு அவ்வளவுதானக்கா
நிருபர் ;- டேய் சுந்தர் நீ தலைவன் செயலாளர்,பொருளார் யாருடா
சுந்தர் ;- செயலாளர் சிவா தான்.ரூட்ட கூப்பிட்டு போறது,கானா பாட்டு ரெடி பண்ணறது,ப்ரச்னை சால்வ் பண்ணறது,ப்ரச்னை இல்லன்ன உண்டு பண்ணறது,மோளம் அடிக்க பஸ்ஸை சரி பண்ணறது இப்படி பல வேலைக்கா செயலாளருக்கு.
நிருபர்;- பொருளாளர்டா
சுந்தர்; பொருள் வைச்சுருக்கிறவன் பொருளாளனக்கா ஐட்டம் அக்கா நிருபர் பயந்து பேட்டியை நா முடிச்சுகிறேன்டா என்று கூறி விட்டு அங்கு வந்த பஸ்ஸில் வேகமாக ஏற, குட்டி குருப்பினரும் பின்னாலே ஓடி வந்து பஸ்ஸில் தொத்தி உள்ளே வந்து பஸ்ஸின் பக்கச்சுவரில் தட்டி பாட ஆரம்பித்தார்கள். கானா பாட்டும் நிஜமும் பின்னர்.
நினைத்த பெண்ணை மடித்து விட்டால்
தெய்வம் ஏதுமில்லை மடித்த பெண்ணை
மணந்து கொண்டால் வாழ்வில் அமைதி என்றுமில்லை
ஆயிரம் பிகர்கள் வருவார் அதில்
எனக்கொரு பிகர்தான் மடிவாள்
அவள்தான் பார்வதி அவள்தான்
கோமதி என்பது ராணிக்குத் தெரியாது
(நினைத்தப் பெண்ணை)
பார்வதியை மடித்துவிட்டாள் பாருக்கு
கூட்டிச் செல்வாள்
கோமதியை மடித்துவிட்டாள் கோவளம்
கூட்டிச் செல்வாள் பள்ளிக்கு போகும் கமலா,
காலேஜ் படிக்கும் விமலா பஸ்ஸினில்
வருவாள் பர்ஸினை தருவாள் பள்ளியில் படிக்கும் பானுமதி (நினைத்தப் பெண்ணை)
No comments:
Post a Comment