Sunday, March 25, 2007

ஏதோ ஒன்று

end of the platonic love,touch with two pair of lips.தொலைவில் நன்றாகத் தெரிந்த,வசீகர முகம் போல்படவே உற்று பார்த்தேன்.
கல்யாணி...................
ஏறக்குறையஓடியவள்போல்நடந்தாள்,நான்நின்றபஸ்
ஸ்டாப்பிதற்கு எதிர்பிளாட்பார்மில். வேகமாக ரோட்டைக் கடந்து அவளெதிரில் போய் நின்று கல்யாணி என்று அழைத்தேன்.
திடுக்கிட்டு நிமிர்ந்தவள்,"சீமாச்சு"என்று கத்தினாள் .
"வாடா பேசிண்டே நடக்கலாம்.புக்காத்து மனுஷாள்ளாம் ஜவுளிக் கடையில் காத்துண்டுருக்கா"என்று என்னையும் இழுத்துக் கொண்டுஓடினாள்.நேக்கு தெரியுமோனோ,என் சின்ன நாத்தனாருக்கு கல்யாணம்.நம்ம கோண்டு மாமாவாத்து பையன் கிச்சாவுக்குத் தான் பேசியிருக்கா.என்றாள்.
"கல்யாணி காப்பி சாப்பிடலாமா"என்று வினவினேன்.
ஒரு வினாடி யோசித்து சரி என்றாள்.ஒருரெஸ்டரண்டில் நுழைந்து காப்பி குடித்தபடியே கேட்டாள்"டேய்,சீமாச்சுஎத்தனை வருஷாச்சு பார்த்து,ஆமா உ ஆத்துக்காரி மாயவரம்ன்னு அக்கா சொன்னா எப்பிடிடா இருக்கா?"என்றாள் .நன்னாயிருக்கா என்றேன்."சரிடாசீமாச்சு,நாழியாறதுஉபோன்நம்பர்கொடுடா" கொடுத்தேன் ."கோவிச்சுக்காதேடாநாழியாறதுவரேன்டா"என்றுகூறியபடியே வேகமாகசென்றாள்.புயலடித்து ஒய்ந்த உணர்வு எனக்குள்.உடனே கல்புவை பார்க்கத் தோணித்து ."ஆட்டோ"என்றேன்.
சப்தம் கேட்ட கல்பு சமையல் உள்ளிலிருந்து சிரித்தபடியயே வந்தாள்."அக்கா போன்பண்ணினள் "என்றாள்.அவளைஏறிட்டு,என்னவாம் அவளுக்கு ?அக்கா,அத்திம்பேர்,நம்மாத்துல எல்லாம் வராளாம் ,என்று கூறியவள் என்னை உற்றுபார்த்தபடி ,கல்யாணிநாத்தனாருக்குகல்யாணம்என்றவளைஇடைமறித்து ,
தெரியும்வரச்சேஅவளைபார்த்துண்டுதான்
வரேன்என்றபடிரிமோட்டைகையிலெடுத்தேன்.எதையெதையோபார்த்தேன்.எழுதினேன்.படித்தேன்.இடையிடையேகல்புஎதோகேட்டாள்,எதையோசொன்னாள்.
"சித்த வந்து சாப்பிட்ரேளா,கைக் காரியமெல்லாம் ஒழிக்கனும்"
கல்புகுரல்கேட்டுகவனம்வந்தவனாய்,அவளைஅருகில்இழுத்துஅணைத்தேன்.
"விடுங்கோன்னா,யாரவது பார்த்துட போற கதவு தொரந்துன கிடக்கு"
என்னிடமிருந்துவிடுவித்துக்கொண்டு,விலகாமல்நின்றவள்
"கல்யாணி ரொம்ப அழகன்னா"என்றாள்.
நீயும்தான்அழகுஎன்றேன்.செல்லச்சிணுங்கலுடன்பழிப்புக்காட்டி ,
"வாருங்கோ நாழியறது,விடிய காலம்பர சீக்கிரமே எழணும்"
என்றவளைதொடர்ந்தேன்.கல்புநீஏன்அவளைசுத்திசுத்திவர
பாட்டிசொன்னா,கல்யாணிக்குஉங்களரொம்பபிடிக்குமாம்.
சின்னவயசுலேருந்துஒன்னாவிளையாண்டிருபேளாம்.ஆமாடிகல்பு,பக்கத்துபக்கத்துஅகம்.அவாத்துலேயும் ,எங்காத்துலேயும்மாறிமாறிவிளையாண்டிருப்போம்.பாட்டிக்குஒருமூட்இருந்தாபேசாதஇருப்பா.ஒருமூட் இருந்தாபிள்ளைகளாஇதுகள்ன்னுதிட்டுவா." சரின்னாநேக்குதூக்கம்வரறது"கண்ணைமூடினேன்.

கண்கள்உறங்கமறுத்தது.ஜன்னல்வழியாகவந்தசந்திரஒளியில்கல்புவின்வைரக்கம்மல் வித்தியசமாகஒளிவீசி, கல்புவின்முகத்தை மேலும்சோபையுறச்செய்தது.அவ்வொளியில்கல்யாணிஆத்துப்பத்திரிக்கைமேஜையில்இருந்ததும்தெரிந்தது.இருவரகத்துபுழக்கடைதான்எங்களின்சிறுவயதுவிளையாட்டுமைதானம்.
அக்காஎன்னைஅடித்தால்கல்யாணிஅன்று கண்டிப்பாக
என்னிடம்அடிவங்குவாள்.செப்புவச்சுநாங்கள்விளையாடும்போதுபெரியவகூடசமயத்தில சேந்துப்பா.கொஞ்சநாளில்விளையாட்டுமாறித்து.பொண்ணாத்துக்காரா,பிள்ளையாத்துக்காரான்னுபிரிஞ்சுண்டு,மீனாட்சிக்கல்யாணம்,பாமாருக்மணிக்கல்யாணம், ஸ்ரீநினிவாசகல்யாணம்,சீத்தாக்கல்யாணம்ன்னுஊஞ்சல்உற்சவம்நடத்தினோம்.பின்இதுவேபல்லாங்குழி,தாயம்,செஸ்,கேரம்என்றுமாறித்து .தாயம்விளையாடும்போதுஎல்லாரும்ஒன்னாச்சேந்துஒரேஅழிச்சாட்டியம்தான்.இந்தஅப்பாக்கள்மட்டும்பரபிரம்மாவாட்டமிருப்பா.ஞாயிறுலீவில்மனுஷாஒருநா,ஒருபொழுது நிம்மதிஇருக்கமுடியறதஇந்தஅத்துலன்னுசிடுசிடுப்பா.10 க்ளாஸ்லீவுக்குகடையநல்லூர்அம்பிமாமாஆத்துக்குப்போயிட்டுவந்துமதியம்வரைகல்யாணிகண்லேயேபடல."பாட்டிகல்யாணிஎங்கபாட்டி,அவகாத்தலயிலிருந்துகண்லேயேபடல"."அவபின்கட்டுலிருப்பா "என்றாள்பாட்டி.அத்த,அக்கா,அம்மாஇவாள்ளாம்பின்கட்டிலிருக்கும்போதுதோணாததுகல்யாணிபின்கட்டிலிருப்பதுகஷ்டமாகத்தோணித்து.வெளியேசென்றேன்.
நாணாகோஷ்டி(சுப்புணி,பஞ்சு,கிட்டு,கிச்சா ,பத்து,சாம்பு) போஸ்ட்மாஸ்டராத்துதிண்ணையில் உட்கார்ந்து,போறவ,வரவாஎல்லாத்தையும்வேடிக்கை பாத்துண்டிருந்தா.அக்ரஹாரத்துமானத்தவாங்கறத்துக்குன்னேபொறந்ததுகள்ன்னுபெரியவமுணுமுணுப்பாநாணாவைப்பார்த்து.நான்மெதுவாகஅவர்களிடம் சென்றேன் .நாணாசிரிச்சுண்டேக்கேட்டான்"எங்கேடாகல்யாணி "அதற்குள்எதித்தாத்துவச்சு,"என்டாநாணாநோக்குவேறவேலையேஇல்லையாடா" ன்னுகனகுமாமிபொண்ணுவாசல்தெளிக்க,படிஇறங்கினாள்.அசடுவழியசிரித்தபடி"இல்லடிவச்சு" என்றான்.நாணாஇருந்தால்வச்சுவுக்கும்கோலம்மறந்துபோய்தப்புத்தப்பாய்வரும் .அழித்து,அழித்துபோடுவாள்.வச்சுவுக்குகல்யாணம்நிச்சயமானதும்,நாணாகோண்டுமாமாவாத்துத்திண்ணைக்குதன்இருபிடத்தைமாற்றிக்கொண்டான்.எனக்கும்ஏதோகொஞ்சம்புரிந்தமாதிரியும்,புரியாதமாதிரியுமிருந்தது.
மறுநாள்காலை.ரேழியில்,மேஜைடிரையரில்குடைந்துக்கொண்டுயிருந்தேன்.பழகியகொலுசுச்சப்தம் .நிமிர்ந்தேன்.கல்யாணி........முடியினடியில்முடிச்சிட்டுஈரத்தலையில் ,காதோரம்ஒற்றைரோஜா.கன்னத்தின்மினுகினுப்பு ,ஏதோஒருபுதுக்கவர்ச்சிகன்னத்தைப்பிடித்துக்கிள்ளவேண்டும்போல்தோணித்து. ஆனால் ஏதோஒன்றுதடுத்தது.அவளைஇப்பொழுதுதான்பார்ப்பதுபோல்பாக்கத்தோணித்து."எப்படாவந்தே?"நான்நேத்திக்கேவந்திட்டன் ,மகராணிக்குஇப்பத்தான்சமயம்வாய்ச்சது....என்றுஇழுத்துபின்,இந்தாடி,ருக்கு, நோக்குகோலநோட்டுக்கொடுத்துவிட்டிற்காஎன்றேன் ."மாமாவாத்துலஎல்லொரும்சௌக்கியமாயிருக்காளா?"இருக்கா ,இருக்காஎன்றேன்."நீஇல்லமநேக்குரொம்பபோரான்னாஇருந்துச்சு" என்றாள்.ஆமாண்டிநேக்குகூடஅப்படித்தான்தோன்றது.நீஎங்காத்துபின்கட்டுலஇருந்துடுஎன்றேன்சீரியஸ்யாக."அப்படியெல்லாம்எங்காத்துலவிடமாட்டா"சரிடாஎன்றவள் "அக்கா " என்றழைத்தபடியேஉள்ளுக்குச்சென்றாள்.ஊரில்விச்சு ,ருக்கு,லல்லி,பாச்சுஎன்றுஅடித்தகொட்டமொல்லாம்அவளிடம்கத,கதையாய்சொல்லணும்என்றால்அக்காவிடம்அவளுக்குஎன்னபேச்சும், கொம்மாளமும். அக்காவும்,அவளும்சிரிக்கும்சப்தம்காதில்விழ,கோபம்,கோபமாகவந்தது.சனியன் எப்படியாவதுபோகட்டும்,மூஞ்சியிலேயேஇனிமுழிக்கப்படாது.வரேண்டாசீமாச்சுஎன்றவள்போயேபோய்விட்டாள்.பத்தாவதுநல்லமார்க்எடுத்து +1 ப்ர்ஸ்ட்குருப்பில்சேர்ந்தேன்.கல்யாணி 10 படித்தாள்.
இளம்வைலட்கலரில்கண்ணைஉறுத்தாதசிவப்புபார்டர்பட்டுப்பாவாடைகட்டிக்கொண்டுகொலுசுசப்திக்க" மாமி " என்றுஅழைத்தவண்ணம்வந்தாள்கல்யாணி .கொலுவிற்குஅலங்காரித்தமின்விளக்குகள்கண்சிமிட்டி , வெவ்வேறுவண்ணங்களில்ஒளிவீசியது .நெற்றியில் நெற்றி சுட்டி,காதில் லோலாக்கு,கழுத்தில் நெக்லஸ்,ஆரம்,லாங்க் செயின்,கையில் தங்க,கண்ணாடி வளையல்,இடுப்பில் சரம்,சரமாகத் தொங்கும் ஹிப் செயின் என சர்வலங்கார பூஷதையாக வந்து நின்றாள் கல்யாணி. வீசிய ஒளியில் கல்யாணி ஜொலி ஜொலித்தாள்.டமுக்கு டப்பா ஆயலோ,டமுக்கு டப்பா ஆயலோ என்று பாடினேன்."பாட்டி இவனை பாருங்கோ பாட்டி""அவன் கிடக்கிறான்"'பாட்டி ஆசிர்வாதம் பண்ணுங்கோ"என்றபடி காலில் விழுந்தாள். "ஷேமமா இருடி குழந்தே" "இந்த டிசைன் நெக்லஸ் நோக்கு நன்னாயிருக்குடி"என்றாள் பாட்டி.'டி விசாலி நீயும் இவளுமா எல்லார் ஆத்துக்கும் போய் கொலுவுக்கு அழைச்சுண்டு,சுருக்க வந்துருங்கோ"இது அம்மா. அக்காவும் எல்லாத்தையும் மாட்டிண்டு தயாரா இருந்தா.கல்யாணியின் எழில் மனதை விட்டு விலகவே இல்லை.அதே நேரம் எனது வட்டம் வெளியில் விரிந்தது.பெண் நண்பிகளும்கிடைத்தனர்.ஆனால் கல்யாணி அவர்களை எல்லாம் மீறி மனதில் நின்றாள்.கல்யாணி என்னிடம் விலகியும்,விலகாமலும் இருந்தாள்."சீமாச்சு இந்த சம் எப்படிடா போடணும்?""இந்த படம் போட்டுக் கொடுடா""கட்டுரைப் போட்டிக்கு கட்டுரை எழுதிக் கொடுடா" என்று எதாச்சும் வேலை வாங்குவாள்.நானும் ஜீனி பூதம் மாதிரி செய்து தர தயராக இருந்தேன்.குறும்பு,கும்மாளம் எல்லாம் போய் என் அப்பா மாதிரி மாறிவிட்டேன்.கல்யாணியோ அக்காவோட ஈஷிண்டு சே என்னதான் பேசுவாளோ இந்த பொம்மனாட்டிகள்!!! பாட்டி எனக்கு படிப்பு அதிகமாதால இப்படி ஆயிட்டேன் என்று பாட்டி அங்கலாய்த்தாள்.
எப்படியோசற்றேசிரமப்பட்டு +2ல்மார்க்எடுத்து,சென்னையில்எஞ்சினரிங்கல்லூரியில்அடித்துபிடித்துசீட்வாங்கியாகிவிட்டது.சீர்காழியிலிருந்துசென்னைவாழ்க்கைஎப்படியிருக்குமோஎன்றகவலையைவிடகல்யாணியின்பிரிவுதான்கஷ்டப்படுத்தியது.கிளம்பும்நாளன்றுகூடகல்யாணி கண்கலங்க, குரல்கம்மதனியாகஎன்னிடம்வந்து,"சீமாச்சுஎன்னையெல்லாம்நினைச்சுப்பாயடா"என்றுவிம்மியவண்ணம்கேட்டாள் ."சீஅசடுஉன்னைமறப்பன்னாடி"என்றேன்அழுகையைஅடக்கியபடி."நேக்குஅழவரதுடா "என்றுகூறியபடிதன்வீட்டிற்குஓடிவிட்டாள் .வேறுவழியின்றிஎல்லாரும்கஷ்டத்துடன்என்னைசென்னைக்குஅனுப்பிவைத்தனர்."போய்சேர்ந்த்தும்கடிதம்போடு"போட்டேன்."போன்பண்ணேன்டா "பண்ணினேன் .கல்யாணிவீட்டில்இருந்தால்அவளும்பேசுவாள்.சென்னைப்பெண்களைப்பார்க்கமுதலில்பயமாகஇருந்தது.பிறகுபழகிவிட்டது.கல்யாணி +2 படிக்கும்பொழுதேவரன்பார்க்கத்தொடங்கிவிட்டார்கள்என்றுபாட்டிபோனில்சொன்னாள் .திருச்சிக்காரா,பிள்ளையாண்டான்நாக்பூரிலேவேலை,கல்யாணிபரிட்சைஎழுதியதும்நிச்சயம்.ஏதோதூரத்துச்சொந்தம்,அவாளாவந்துகேட்கிறாள்.இதுவும்பாட்டிதகவல்.ஏதோஒருவகையில்கல்யாணிவீட்டில்எல்லோரையும்வசியப்படுத்திவைத்திருந்தாள்.
கல்யாணியின்திருமணப்பேச்சுநடைபெற்றதாலோஎன்னவோஊருக்குப்போகவிருப்பமிருக்கவில்லை."ஊருக்குஎப்படாவருவ" பாட்டிகேட்டதற்கு,"போபாட்டிஇதுஎன்னஸ்கூலாஇஷ்டத்திற்குவர,பாடம் ரொம்பஇருக்குபாட்டி"என்றேன்.செமஸ்டர்முடியவும்கல்யாணிக்குநிச்சியம்நடக்கவும்சரியாகஇருந்தது.15 நாளில்கல்யாணம்.ஏதோசாக்குசொல்லிஹாஸ்டலியேதங்கிவிட்டேன் .பாட்டியும்போனில்வருந்திஅழைத்தாள்."நம்மாத்துபொண்ணாட்டம்வளர்ந்தவள்கட்டாயம்வந்துவிடு ""இல்லபாட்டி,நோக்குசொன்னாபுரியாது .ரிக்கார்ட்ஸ்சம்மிட்பண்ணனும்"கல்யாணம்முடிந்துகல்யாணிபுக்காத்துக்குக்கிளம்பும்போது "மாமிசீமாச்சுவரவேயில்லைஅவன்கிட்டேபேசவேமாட்டேன்,வராமலேஏமாத்திட்டான்'' என்றுகண்கலங்ககூறிவிட்டுச்சென்றளாம்.அக்காவிசாலிக்கும்வரன்பார்த்தார்கள் .நாக்பூரில்கல்யாணிஇருந்ததால்கல்யாணத்திற்குவரவில்லை .அவளும்,அக்காவும்கடிதத்தொடர்பு,போன்தொடர்பு,ஈ-மெயில்தொடர்புஎனஎல்லாத் தொடர்பும்வைத்திருந்தனர். பிள்ளையாண்டிருக்கா,சீமந்தம் ,ஆண்பிள்ளை.எப்படியோஅவளைப்பற்றிதகவல்காதில்விழுந்துவிடும்.ஏனோகல்யாணியைபார்ப்பதைகூடியமட்டும்தவிர்த்தேவந்தேன்.எதுஎன்னைத்தடுத்ததுஎன்றுஇதுவரைபுரியாதபுதிராகவேஇருந்துவருகிறது.காலஓட்டத்தில் 5 வருடம்ஓடி "காம்பஸ்இண்டர்வ்யூ" வில்செலக்ட்ஆகிவேலையும்சென்னையில்செட்டிலாகிவிட்டேன்.பிறகுகல்புவின்வருகை.கல்புவும்மனதைக்கொள்ளைகொண்டாள்,மென்மையானஅணுகுமுறையால் .
இதோகல்யாணமண்டபமுகப்பு.மாலைநேரம் .அன்றுகண்டகல்யாணிபோலவேசர்வஅலங்காரபூஷதையாகவாயிலில்நின்றிருந்தாள்.எங்களைக்கண்டதும்வாடாஎன்றுவரவேற்றவள்,"ஏன்னாசித்தஇங்கவரேளா,எங்கசீமாச்ச்சுஇவன்தான்"என்றுதன்கணவனுக்குஎன்னை அறிமுகப்படுத்தினாள்."ஒ,ஐஸீ, ஐயாம்சிவராமன்"என்றுகைக்குலுக்கினார்.'ஐநோ" என்றேன்நான்கைக்குலுக்கியபடியே."எங்காத்துலஓரேசீமாச்சுபுராணம்தான்போங்கோ.உங்கஸ்மரணைஇல்லாதகல்யாணிக்குபொழுதுவிடியாது"என்றார்சிவராமன்விகல்பம்இல்லாமல்.எனக்குள்இருந்தமெல்லியதிரைஅகன்றதுபோலஉணர்ந்தேன்."கல்யாணிஇதுகல்பு"புன்னகையோடுஇருந்தகல்புவைகல்யாணிஇழுத்துஅணைத்துநெற்றியில்முத்தமிட்டாள் .இப்பொழுதுகல்புவிடுங்கோயாரனபாத்துடபோறஎன்றுகூறவில்லை.
__________________
end of the platonic love,touch with two pair of lips.இருவரின் இதழ்கள் முத்தமிட்டுக் கொள்வதோடு platonic love முடிவடைகிறது என்னும் ஒரு வழக்குச் சொல் இருக்கிறது.(மேற்கத்தியது) இக்கதையிலும் ஒரு முத்தம் platonic loveவை முடிவுக்குக் கொண்டுவருகின்றது. இக்கதையில் வரும் மெல்லிய platonic loveவை உணர முடிந்தால் நான் எழுதிய கதைக்கு பாஸ் மார்க்.

1 comment:

Unknown said...

Platonic love - try to say in tamil words. En mathipen 100/100.--- kannan AKS.