Friday, January 5, 2007

அன்றைய அரசியல்

பொரியார் படத்திற்கு சில யோசனைகள் என்ற தலைப்பின் கீழ்10\1\07 துக்ளகிலிருந்து.
மானம் இருந்தால் இந்த நாட்டில் பாப்பாரக் குஞ்சு இருக்குமா?இருக்க முடியுமா?ஒரு பயல் பூணூல் போட்டுக்கிட்டு நம் எதிரில் வருவானா?'என்னடா அர்த்தம்,இந்த பயலுக்கு பூணூல் இருகிறது;ஏ அயோக்கியப் பயலே என்ன அர்த்தம்?நீ பிரமாணன்.நான் சூத்திரன்என்று அர்த்தம்.அப்படி என்றால் என்ன?உன்னுடைய வைப்பாட்டி மகன் என்று அர்த்தம்.போடு உன்னைச் சொருப்பாலே-அப்படி என்று ஆத்திரமல்லவா வரும்-நமக்கு மானம் இருந்தால்?
பொறுக்கித் தின்கிறவன்
அடுத்தாற் போல ஒழிய வேண்டியது காங்கிரஸ்.இனிமேல் அது ஒன்றும் உருபடியாகயாகாது.இப்போதே இரண்டு பேரும் தொங்குகிறார்களே!இரண்டாகப் பிரிந்து,ஒன்றுக்கொன்று மானங்கெட்டுத் திரிகிறது.இப்பொழுதே ஒருவருக்கொருவர் சேர்ந்து பார்க்கலாம் என்று(நினைக்கிறது)
சேர்ந்தால் என்ன மரியாதை இருக்கப் போகிறது?இனி எவன் காங்கிரஸை ஆதரிப்பான்?பொறுக்கித் திங்கிறவனைத் தவிர?மந்திரி ஆகணும் ன்றால் வாழ முடியாது-ஆகிறவன் ஆகிவிட்டு போகிறான்.சட்டசபை மெம்பர் ஆகணும் என்றால் முடியாது-ஆகிப் பொறுக்கித் தின்கிறவன் தின்று விட்டுப் போகிறான்.இது இரண்டும் வேணாம் என்கிறவன் நான்!
நாம் விட்டது தப்பு.அயோக்கியப் பயல்களுக்கு-காங்கிரஸ்காரப் பயல்களுக்கு இடம் கொடுத்தோம்.அவன் பார்ப்பான்.அதிலே பொறுக்கித் தின்னப் போனவன் நம் ஆள்.அதிலே முக்கால் வாசிப்பேர் பார்ப்பானுடைய வைப்பாட்டி மகன் என்று ஒத்துக் கொள்கிறவன்.
19\12\1973 ல் ஆற்றிய உரையிலிருந்து.
நாட்டு முன்னேற்றத்துக்கு வழி
நான் 1932 ல் ஜெர்மனி சென்றிருந்தேன்.அப்போது ஒரு வீட்டில் தங்கியிருந்தேன்.அந்த வீட்டுக்காரர்களை விசாரித்தேன்.அவர்கள் தங்களை'proposed husbund and wife" என்றார்கள்.அப்படி என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டேன்.''நாங்கள் உண்மையான கணவன்-மனைவியாகத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு,ஒருவரை ஒருவர் நன்றாகப் பயிற்சி பெறுகிறோம்'' என்றார்கள்.''எவ்வளவு காலமாக''என்று கேட்டேன்.''எட்டு மாதமாக''என்றார்கள்.எப்படி இருக்கிறது பாருங்கள்?அந்த நாடு முன்னேறுமா?'பதிவிரதம்'பேசி,பெண்களை அடிமையாக்கும் இந்த நாடு முன்னேறுமா?
விடுதலை-28.6.73
(இப்பொழுதும் பேசத் தயங்கும் விஷயங்களை தைரியமாக பெண்ண்டிமை,கற்பு,பெண்களின் சுதந்திரம்போன்றவற்றை பற்றி பேசியிருக்கின்றார்.ஆனால் அதை வெளியிடும் தைரியம் இன்று கூட யாருக்கும் இல்லை.பெண்கள் குழந்தை பெற்று கொள்ளவதினாலேயே அடிமை ஆகிறார்கள்.எனவே குழந்தை பெற்று கொள்ளக் கூடாது.ஆண்கள் 2,3 பெண்களுடன் தொடர்பு கொள்கிறார்கள்.அதுபோல பெண்களும்4 ஆண்களுடன் தொடர்பு வைத்து கொள்ள வேண்டும் என்று புரட்சிகரமான? கருத்தை கூறியவர்.பாரதியார் கற்பு என்பதை இருபாலோருக்கும் பொதுவில் வைப்போம் என்றார்.பொரியாரோ யாருக்கும் கற்பே வேண்டாம் என்கிறார்.) அவர் எழுதியதை அப்படியே படிக்க வேண்டுமானால் துக்ளக்கிலிருந்தோ அல்லது விடுதலை நாளிதழை தேடிக் கண்டுபிடித்து படிக்கலாம்.அரசியல்வாதிகளும் அவர்களுக்கு வசதியானதை மட்டும் எடுத்துக் கொண்டு நம்மை எவ்வளவு முட்டாளாக்குகின்றனர் என்பதுதெரியவரும்.
அப்படியே நம்பி விடாதீர்!
சாகோதர்களே!நான் சொல்வதொல்லாம் எனது சொந்த அபிப்பிராயங்கள்தான்.....'ஒரு பொரியார் உரைத்து விட்டார்'என நீங்கள் கருதி,அப்படியே இவைகளைக் கேட்டு,நம்பி விடுவீர்களானால்,அப்போது நீங்கள் யாவரும் அடிமைகளே!
விடுதலை-8\10\1951
நாளை என்ன நடக்கும்நாளை
ஒருசமயம் சமதர்ம காலத்தில்,'பிராமணர்கள்(சரீரத்தால் பாடுபடாதவன்)சொத்து வைத்திருந்தால்,மற்றவர்கள் பலாத்காரத்தில் பிடுங்கிக் கொள்ளலாம்'என்று ஏற்பட்டாலும் ஏற்படலாம்.இந்த மாதிரிமாறுதல்கள் காலத்திற்கும் பகுத்தறிவிற்கும்,நாட்டின் முற்போக்கிற்கும் ஏற்றாற்போல் நடந்துதான் தீரும்.எனவே நான் மாறுதலடைந்து விட்டேன் என்று சொல்லப்படுவதில் வெட்கபடபோவதில்லை.நாளை நான் எப்படி மாறப் போகின்றேன் என்பது எனக்கே தெரியாது.ஆகையால்,நான் சொல்வதை கண்மூடித்தனமாய்நம்பாதீர்கள்.
குடியரசு-11\10\1931

No comments: