அரிகேசரி பராக்கிரம பாண்டியனால் தென்காசி கோவில் 500வருடங்களுக்கு முன் கி.பி 1446-ல் கட்டப்பட்டது.கோவில் கட்டியபின் வருங்காலத்தில் கோயில் பழுதுபட்டால் கவனிப்பார் யாருமில்லையே என்ற எண்ணம் பாண்டியன் மனசை உறுத்தியது.சன்னிதியில் விழுந்து சாஷ்டாங்கமாய் விழுந்து பிரார்த்தனைசெய்தான் பாண்டியன். யாரை வணங்கிப் பிரார்த்தனை செய்தான்?பார்க்கலாம்.
ஆராயினும்,இந்தத்
தென்காசி மேவு பொன் ஆலயத்து
வாராதோர் குற்றம்
வந்தால் அப்போ(து)அங்கு
வந்(து)அதனை
நேராகவே யொழித்
துப்புரப்பார்களை நீதியுடன்
பாரார் அறியப்
பணிந்தேன் பராக்கிரம பாண்டியனே.
இனிமேல் 500 வருஷங்கள் 1000 வருஷங்கள் கழித்து அப்போது வாழும் மக்களில் யாராவது இந்தத் தென்காசியில் அமைந்துள்ள அழகிய ஆலயத்தில் எதிர்பாராத பழுது எதேனும் ஏற்பட்டால் அந்தச் சமயத்தில் ஆலயத்துக்குச் சிரத்தையுடன் வந்து அந்தக் குறையை உடனடியாகவே நீக்கி ஆலயத்தைப் பாதுகாக்கும் தர்மான்களை சாஸ்திரமுறைப்படி இதோ நிற்கிற உலகத்தார் சாட்சியாக நன்றியுடன் வணங்குகிறேன் பராக்கிராம பாண்டியனாகிய நான்நான்.
இந்தச் செய்யுளையும் கோபுரவாசலின் சுவரில் பதித்து வைத்து இருக்கின்றார்கள்.உண்மையான,அரிய பக்தியை வெளியிடுகின்ற பாடல்.
ரசிகமணி டி.கே.சி.கட்டுரை-கல்கி-பொங்கல் மலர்-1947
கடந்த சில ஆண்டுகளுக்குமுன் தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கோபுரம் இல்லாதிருந்த நிலையில் புதிதாக ராஜகோபுரம் கட்டி முழு அளவில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்வித்த மதிப்பிற்குரிய திரு.சிவந்தி ஆதித்தனை பராக்கிரம பாண்டியன் பாராட்டி இருப்பார் என்பதில் ஐயமுண்டோ!!!!
ம.ஜெயபாரதி
இக்கட்டுரையை தொகுத்து எழுதி அனுப்பியது என் தங்கை திருமதி.ம.ஜெயபாரதி.விருதுநகரில் வசிக்கும் இவள் இலக்கிய தாகம் மிக்கவள்.சங்க இலக்கியத்திலுருந்தும்,பிறவற்றிலிலுருந்தும் ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதியிருக்கிறாள்.அவற்றை மன்றத்திலிட்டு பெருமை அடைகிறேன்.
_________________
No comments:
Post a Comment