விட்டுவிடப் போகுதுயிர் விட்டவுடனே உடலைச்
சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார் - பட்டதுபட்டு
எந்நேர மும்சிவனை ஏத்துங்கள் போற்றுங்கள்
சொன்னேன் அதுவே சுகம்.
விளக்கம்:
நாம் இறந்தவுடன் நம் பூதவுடலை உறவினர்கள் எரித்து விடப் போகிறார்கள். என்ன பாடுபட்டாயினும் எப்பொழுதும் சிவபெருமானைப் போற்றித் துதியுங்கள், வணங்குங்கள். அவ்வாறு செய்வதுதான் சுகம்.
2 comments:
பட்டினத்தார் 'வாழ்ந்து' கெட்டவன். எதன் பொருட்டு ஆடினானோ, அது ஒன்றுமில்லாத ஒரு மாயை என்பதை உலகுக்குச் சொன்னவன்.
என் மானசீக காதலன் கவியரசன் கண்ணதாசனுக்கு ஞான குரு. அந்த வழியில் எனக்கும் அகந்தையைப் போக்கிய குருவானவன் பட்டினத்தார்.
என்னுடைய 20 வயதில் படித்தேன் இந்தப் பாடலை. இன்றுவரையிலும் என் உடனேயே இருக்கிறது. என் ஒவ்வொரு எழுத்திலும், பேச்சிலும் இவனது இந்த வார்த்தைகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது இந்தப் பாடல்.
பலரும் சொல்வார்கள், "எதையும் நெகட்டிவ்வா திங்க் பண்ணாதே.." என்று. இவர்கள் எதையும் பாஸிட்டிவாக அடைய வேண்டும் என்பதற்காக அதற்கான வழிகளை நெகட்டிவ்வாக வைத்துக் கொள்பவர்கள். காரணம் இவர்களது கண்களுக்குத் தெரிவதெல்லாம் ஒரே நோக்கம், வெற்றி மட்டுமே. அது எப்படி கிடைத்தால் என்ன?
இதைத்தான் பட்டினத்தாரும் சொல்லியிருக்கிறான். " இடையில் வந்த உனக்கு இடையிலேயே கொடுத்தது ஈசன்தான்.. கொடுப்பான். எடுப்பான். மறைப்பான்.. துவைப்பான்.. பின் மீண்டும் கொடுப்பான்.. எடுப்பான்.. மறைப்பான்.. துவைப்பான்.." என்று..
யாருக்குப் புரிகிறது?
எல்லோருமே பட்டினத்தார் போல் பட்ட பின்பு தெரிந்து கொண்டு பின்புதான் பட்டினத்தாரையே தொடுகிறார்கள். அதற்கு முன் தொட்டிருந்தால் பல சாம்ராஜ்யங்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்.
எல்லாம் ஈசன் செயல்..
நன்றிகள் மேடம்.. விரைவில் தமிழ்மணத்தில் உங்களைச் சந்திக்க விரும்புகிறேன்.. வாருங்கள்..
நன்றி உண்மைத் தமிழன் அவர்களே!!
Post a Comment