Friday, January 26, 2007

அத்தமும் வாழ்வும் அகத்துமட்
டேவிழி யம்பொழுக
மெத்திய மாதரும் வீதிமட்
டேவிம்மி விம்மியிரு
கைத்தல மேல்வைத்து அழுமைந்
தரும்சுடு காடு மட்டே
பற்றித் தொடரும் இருவினைப்
புண்ணிய பாவமுமே
விளக்கம் :
சம்பாத்தித்த செல்வமும் அதனால் உண்டான வாழ்வும் வீட்டின் உள்ளே மட்டுமே. நம்மைச் சுற்றியிருந்த பெண்கள் கண்களில் கண்ணீருடன் வீதிவரை. புதல்வர்களோ சுடுகாடு வரைதான். இறந்தவுடன் நம்முடன் வருவது நாம் செய்த புண்ணிய பாவம் மட்டுமே.
ந.சிவநாத்

No comments: