புதுவதான மலர்கொய் வதுயென கொய்தாய்
பதுமைநீ உனழகில் மயங்கிய மனத்தினை
கதுப்புக் கன்னத்தில் வெட்கச் சிரிப்புடன்
மதுமலருடனே,கொய்தமனதனை சூடினாய் குழலில்.
அழகிற்கு இலக்கணம் தீட்டினால் விளைவதும்
அழகிற்கு ஓவியம் வரைந்தால் வருவதும்
அழகிற்கு சிலைவடிவு வடித்தால் உருவாவதும்
அழகிற்கு உருவகம் அனைத்தும் நீயோ...!!
வசந்தகால பூபாளராகம் விடியலில் நினைவுன்
வசமாய் குதியலிட்டு,பார்வையின் பாரிசத்திற்காய்
வசங்காமல் அடமாய் மனதுள்-வேறுவழி
வசதியின்றி தொலைவில் அவள்.
_
நாத்திருந்த கழனியில் முளைவிடும் நினைவுப்பயிர்
கோத்திருந்த நெல்மணியாய்,சொல்லிச் சென்றவிடத்தே
காத்திருந்த கணத்தில் செல்லக் கோபத்துடன்
பூத்திருந்த இனியநினைவு வலம்.
தொலைவிற் கப்பாலும் இணையும் இருயுள்ளம்
தொலைந்த கணத்தை நினைந்து,கனவிலும்
தொலைந்து நிழலிலும் கரைந்து,ஊடகத்தால்
தொலையாமல் காதலில் கட்டுண்டோம் நாம்.
கற்றகல்வி பெற்றபணி நிமித்தம் உன்பிரிவால்,
உற்றதுணை நினைவுகளே நிதமும் என்னுடன்
மற்றயுறவு ஆயிராயிரம் இருப்பினும் உயிரே
பற்றநீயின்றி நாடிநிற்கும் இவள்.
No comments:
Post a Comment