Sunday, November 26, 2006

மொழிகளின் நிலைபாடு

இரு வாரங்களுக்கு முன்பு என் தம்பியுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது,கணினியில் ஆங்கில மொழியே கோலோச்சிக் கொண்டிருக்கையில்(அட்வான்ஸாக)பிற மொழிகளில் இவ்வாறு பதிவது தேவையா என்று வினவினான்.அதாவது கதை,கட்டுரை போன்ற ஆக்ககளைக் குறித்து கூறுகிறான்.இது நேரத்தை வீணடிக்கும் செயலாக அவன் கருதியிருக்கலாம்.
இவ்வலைப் பூவினை கண்ணுற்றவர்கள் தங்கள் பதிவினை பதியலாம்.

3 comments:

Jeevan said...

1980களில ஜப்பான்ல ஒரு ஆறு மாசம் இருந்தேன்.
பெரிசா சாதிக்கிறவங்க யாருக்கும்
ஆங்கிலம் தெரியல்ல.
(சாதிச்சிட்டதா யாரும் அங்கே மார் தட்டினதை பார்க்கல்ல.)
நானும் ஒரு ஸ்கொலசிப் மாதிரி ஒண்ணுக்காக படிக்க போயிருந்தேன்.

என் விரிவுரையாளரிடம்
இங்க சாதிச்சவங்களுக்கு
ஆங்கிலம் தெரிஞ்சிருந்தா அவங்க நிலமையே வேற என்று தெரியாம சொன்னேன்.

இப்ப மட்டும் என்ன
அவன் சாதனைகளை எழுதுறதுக்கு
லட்சம் பேர் இருக்காங்க.
அந்த லட்சத்தில ஒருவனால கூட
அவன் மாதிரி சாதிக்க முடியாது.

அது Sony டிசைனர் ஒருவர் குறித்து
அவர் கூறியது.

அன்று என் தலை சுற்றியது.

உண்மைதான்.
தாய் மொழியில் ஒருவன் சிந்திக்கிறது
மாதிரி வேற எந்த மொழியிலும் இதயத்தால் சிந்திக்க முடியாது.

ஏனைய மொழிகளில் சிந்திப்பவன்
இதயத்தால் சிந்திக்காமல் மூளையால் சிந்திக்கிறான்.
அதாவது தன்னை உயர்த்திக் கொள்வதற்கு மட்டுமே!

ஒவ்வொரு மனிதனும்
தன் தன் தாய் மொழியால் சிந்திக்கும் போது
மனித நேயத்தோடு சிந்திக்கிறான்.
அது எந்த மொழியாக இருந்தாலும்......
அவனது சமூகத்தின் உயர்வுக்காய் சிந்திக்கிறான்.

ஒவ்வொரு சமூக முன்னேற்றமும் சேர்ந்துதான்
உலக முன்னேற்றமாகிறது.

ஏனைய மொழிகள் தேவை.
அது மற்றவர்களோடு எம் கருத்துகளை பகிர்ந்து கொள்வதற்கு
அவர்களை புரிந்து கொள்வதற்கு.......
தெரியாததை கற்றுக் கொள்வதற்கு....

இங்கு (சுவிஸில்)
பேசாத சிறு குழந்தைகளை டாக்டரிடம் சிகிச்சைக்காக
அழைத்து போனா
அவங்க கேக்கிற முதல் கேள்வி......

"உங்க குழந்தையோட
உங்க மொழியில பேசுறீங்களா?"

இல்லை என்பது பலரின் பதில்.

"நீங்க
உங்க குழந்தையோட
உங்க மொழியை பேசுங்க.
குழந்தை சீக்கிரமா பேசும்"
என்பது டாக்டரின் ஆரம்ப சிகிச்சை.

அதுக்கு பிறகு டாக்டர் தேவையே இல்ல.

Padmaja said...

சாதனையாளர்களுக்கு மொழி ஒரு பிரச்சினையாக என்றுமே இருக்காது. அதே போல், மொழி வெறி கொண்டு அலைய தேவையில்லை. அனைத்தும் கற்றிருக்க, நமக்கு தெரிந்த மொழியில் சிந்தித்து எழுதுவதில் தவறேதுமில்லை என்பதே என் தாழ்மையான கருத்து.

Jeya Balaji said...

ம்ம் .. நான் கூறியதைத் தவறாக புரிந்துள்ளாய், அக்கா. தமிழில் எழுதுவதிலும், படிப்பதிலும் மிகுந்த ஆவல் கொண்டேன், கொள்கின்றேன், கொள்வேன். ஆனால், ஒரு கருத்தைக் கூறும் பொழுது, பலர் படிக்க வேண்டுமா அல்லது தமிழ் அறிந்தோர் படித்தால் போதுமா என்பதைப் பொறுத்தே மொழியினைத் தேர்ந்து எடுக்க வேண்டும்.

இதனையே அன்று நான் கூறினேன்.